Subscribe Us

header ads

அல்குர்ஆன் கற்பித்தலுக்கான ஆசிரியர் பயிற்சி நெறி

கற்றல் கற்பித்தல் துறை நாளுக்கு நாள் வியக்கத்தக்க அளவில் வளர்ச்சிகண்டு வருவதை நாம் அறிவோம். சுமகால மாணவர்கள் தகவல்களை உள்வாங்கும் அளவும் வேகமும் முன்னைய காலங்களைவிட பாரியளவில் மாற்றம் கண்டுவருவதை கண்கூடாக காண்கின்றோம். கற்பித்தல் துறையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் போதியளவு அல்குர்ஆன் கற்கையிலும் உள்வாங்குவது இன்றியமையாத தேவையாகும். ஒருமாணவன் ஏககாலத்தில் பாடசாலைலயில்  கவர்ச்சிகரமான கற்பித்தல் சூழலையும் அல்குர்ஆன் கற்பித்தலில் பாரம்பரிய கற்பித்தல் சூழலையும் எதிர் கொள்கிறன். இதனால் அல்குர்ஆன் கற்கையில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன் சிறார் மத்தியில் அல்குர்ஆன் மீதுள்ள பற்றிலும் ஆர்வத்திலும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் அவர்களின் நம்பிக்கையிலும் தாக்கம் செலுத்தும்.
எனவே அல்குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கண்டிப்பாக கற்பித்தல் தொடர்பான முறைசார் அறிவையும் பயிற்சியையும் பெற்றிருப்பது காலத்தின் தேவையாகும்;,  இந்தவகையில் எமது நிறுவனம் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ!



பயிற்சிநெறியின் உள்ளடக்கம்
         பிள்ளைகளின் பொதுவான இயல்புகள்.
         வதியும் சூழலும் குடும்பப்பின்னணியும்.
         பிள்ளைகளிடம் காணப்படும் சிறப்பியல்புகளை இணங்காணல்
         பிள்ளைகள் எவ்வாறுகற்கிறார்கள்.
         கற்றல் கற்பித்தலைதிட்டமிடலும் நடைமுறைபடுத்தலும்.
         அரபு எழுத்து அறிமுகத்திற்கான யுக்திகள்
         مخارج الحروفஆசிரியர் தகைமையும் கற்பித்தல் முறைகளும்.
         தஜ்வீத் கலை அறிமுகமும் ஆசிரியர் தகைமையும்.
         அல்குர்ஆன் திலாவத் அறிமுகம்.
வளவாளர்கள்
·          ஆசிரியர் ஆலோசகர்கள்;        புத்தளம் வலயக் கல்விப் பணிமனை
·          அல்ஹாபில் மௌலவி ளுளு ஸமீல்
·          அல்ஹாபில் மௌலவி ஆஆஆ ஜூனைதீன்
·          மௌலவியா ஸகீலா அப்துல் வஹ்ஹாப்

விண்ணப்பிப்பவர்களுக்கான தகுதிக
  •  ஷரிஆ துறை கற்கையை பூர்த்தி செய்தவர்கள 
  • அல்லது முறைசார் ஒழுங்கில் தஜ்வீத் கற்றவர்கள்
  • அல்குர்ஆன் மத்ரஸாவில் கற்பிப்பவர்கள்
  • ஏற்றுக்கொள்ளத்தக்க அரபு எழுத்து உச்சரிப்பு தகைமை பெற்றவர்கள்

பெண்கள் மாத்திரம்

காலஅளவு-15 மணித்தியாலங்கள்

காலம் - 12/06/2014காலை     08.30 முதல் 13/06/2014       05.30 வரை

கட்டணம் -1500.00    (உணவு, தங்குமிடவசதி, பாடக்குறிப்புகள் உற்பட.)

தொடர்புகளுக்கு 0777 896 782

விண்ணப்பங்கள் 31/05/2014 முன் கிடைக்கப் பெற வேண்டும்

இவ்வண்ணம்
ஆர்அப்துல் ரஷீத்
அதிபர்
அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா

Post a Comment

0 Comments