Subscribe Us

header ads

பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 2 புதிய பாடத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் கணனி வன்பொருள் பொறியியல் பாடத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஷெணிக்கா ஹிரிம்புரேகம தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் மொழிப்பெயர்ப்புக் கல்வி  பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

2013 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இந்த  பாடத்திட்டங்களை கற்பதற்கான வாய்ப்புள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஷெனிக்கா ஹிரிம்புரேகம மேலும் ​தெரிவித்தார்.

Post a Comment

0 Comments