Subscribe Us

header ads

கத்தார் நாட்டின் சாதனைகளில் புத்தளம் இளைஞர்களின் தொடர் பங்களிப்பு...

பொதுவாக உலகிலே வர்த்தகத்தில் பெயர் போன ஒரு நகரம் தான் துபாய். அந்த நகரம் உலகில் இருக்கின்ற எந்த நாடுகளாலும் ஈடுகொடுக்க முடியாத அளவு வளர்ந்துவருகிறது என்பது எல்லோரும் அறிந்த விடயம். சில காலத்திற்கு முன்பு துபாய் எக்ஸ்போ என்ற ஒரு கண்காட்சியை வென்றெடுத்தது. அதனால் துபாய் மேலும் தனது நாட்டில் வளர்ச்சியை பெருக்கி வருகிறது. இப்படி எல்லையை தாண்டி பயணிக்கும் துபாய்க்கு நிகராக வளர்ந்து வரும் இன்னொரு நாடு கத்தார் எனலாம். மிகவும் திட்டமிட்ட போக்குடன் தனது அனைத்து நகர்வுகளையும் செய்துவரும் கத்தார் அரசு துபாய் அரசுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துவருகிறது. துபாய்க்கு எக்ஸ்போ என்பது போல கட்டாருக்கு உலக கால்பந்து கிண்ணம் கிடைத்ததுதான். இலகுவாக உலக கிண்ண இடத்தை வென்றிடலாம் என்று நினைப்பில் இருந்த துபாய்க்கு ஆப்பு வைத்தது கத்தார். அதனால் வெறும் சில வருடங்களில் பாரிய அபிவிருத்தியை பெற்றிருக்கும் இந்த நாடு இன்னும் பிரம்பாண்டமான அபிவிருத்திகளை செய்துவருகிறது.
அதுமட்டும் அல்லாது மத்தியகிழக்கு நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் போட்டி நாட்டின் அபிவிருத்திகளில் பாரிய பங்கினை வகிக்கிறது. இதனை மேலும் ஊக்குவிக்க மத்தியகிழக்கு நாடுகளுக்கு மத்தியில் ஒரு பாரிய தகவல் தொழில்நுட்ப கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருவது வழக்கம். அதன் படி இந்த வருடம் கத்தார் அந்த கண்காட்சிக்கான இடத்தினை வென்றது துபாய்க்கு ஒரு பெரிய வீழ்ச்சியே என்று கூற வேண்டும். சுமார் 3 நாட்கள் நடந்த இந்த கண்காட்சி 3000 இற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப சிறப்பு தேர்ச்சி பெற்றோரின் வருகையோடு நேற்று முடிவடைந்தது. இதிலே LINKEDIN வலைத்தளத்தின் CEO மற்றும் பல பிரசித்திப்பெற்ற கம்பனிகளின் உரிமையாளர்கள் பலர் பல பேச்சுகளை நிகழ்த்தினார்கள். இந்த கண்காட்சிக்கு சுமார் 700 மேற்பட்ட கம்பனிகள் தனது பொருட்களை அறிமுகம் செய்தது. நடனமாடும் ரோபோ, உலகின் புதிய ரயில் சேவை, தொலைப்பேசி உலகின் புதிய அம்சங்கள் என பல வியத்தகு தொழில்நுட்ப விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் தொண்டர்களாக பங்குபற்றுவதற்கான அனுமதியை கத்தார் அரசு மற்றும் கத்தார் தகவல் தொழிநுட்ப அமைச்சு, கத்தார் நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கியது. ஆனால் நமது SILENT VOLUNTEERS குழுவின் ஒரு சிலரின் முயற்சியால் அந்த தொண்டர்களில் இருவர் SILENT VOLUNTEERS ஆக பங்குபற்றினார்கள். இவர்கள் கண்காட்சிக்கு வருகை தந்த பிரபலங்களின் பெயர்களை பதிந்து அவர்களுக்கு உள்ளே செல்வதற்கான அனுமதியை கொடுக்கும் (Registration Volunteers) நபர்களாக கடமையாற்றி சிறப்பாக இந்த கண்காட்சியை நடத்தி முடிக்க உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பங்கு பற்றிய நமது தொண்டர்களான சகோதரர் பசால் (Fazal) மற்றும் பினோஸ் (Finos) ஆகியோர் இவ்வாறு தெரிவித்தார்கள் :
“இந்த நிகழ்வில் தொண்டர்களாக பங்குபற்றியமைக்கு முதலில் அல்லாஹ்விற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம், இதன் மூலம் கத்தார் நாட்டில் படிக்கும் மாணவர்களோடும் உலகில் பிரசித்தி பெற்ற நபர்களுடன் அறிமுகமாகிக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது எமக்கு இரண்டாவது நிகழ்வு, இன்னும் பல நிகழ்வுகளில் தொண்டர்களாக பணியாற்ற விரும்புகிறோம் காரணம் நாம் இந்த நிகழ்வுகள் மூலம் பல நாட்டை சேர்ந்த பல நபர்களோடு பேசுகிறோம், அப்போது அவர்கள் பேசும் விதம், அவர்கள் அறிந்து வைத்திருக்கும் தகவல்கள் எம்மை சிந்திக்க வைக்கின்றன. வெறும் 17 வயதுடைய மாணவன் அறிந்து வைத்திருக்கும் விடயம் நாம் இருக்கும் நிலையை உணர்த்தியது. இப்படி நிகழ்வுகளுக்கு சென்று அவர்களோடு பழகுவது, எமக்கு பல விடயங்களை சொல்லித்தருகிறது. அதன் மூலம் எம்மை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மாறி வரும் உலகில் நாம் வெறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்துகொண்டு மாறாத வாழ்வில் வாழ்வது ஒரு ஒழுங்கான வெளிப்பாடை தராது. ஆகவே இது போன்ற நிகழ்வுகளுக்கு இனி வரும் காலங்களில் எம்மோடு சேர்ந்து பலர் பங்குகொள்ள வேண்டும் என்பது எங்களது அன்பான வேண்டுகோள், அதற்கான சந்தர்ப்பத்தை நமது SILENT VOLUNTEERS குழு பெற்றுத்தரவும் தயாராக இருக்கிறது”
இந்த நிகழ்வு சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு : http://www.qitcom.qa/
எமது facebook பக்கம் : https://www.facebook.com/SVolunteer

SIlent Media




Post a Comment

0 Comments