Subscribe Us

header ads

நுரைச்சோலை அனல் மின் நிலையம் காணச் செல்கிறது ஐதேக குழு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பார்வையிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று செல்கிறது.

மத்தல விமான நிலையம், மற்றும் மாகம்புற துறைமுகம் என்பவற்றை பார்வையிடச் சென்று எதிர்ப்பை சந்தித்த பின் ஐதேக குழு நுரைச்சோலை செல்கிறது.

தான் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நுரைச்சோலை செல்வதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்தின் பணிகளை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமது 512 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் சம்பூரில் அனல் மின்சார திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறிவித்தது. எனினும் அந்த பணிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ, மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

250 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள இந்த அனல் மின்சார நிலையம் 2018 ம் ஆண்டளவில் தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத தெரண 

Post a Comment

0 Comments