Subscribe Us

header ads

உடல் ஆரோக்கியத்தையும் பாராமல் சாதாரண ஒரு பிரஜையைப் போன்று வீதியில் இறங்கி இனவாதிகளுக்கு எதிராக போராடிய பிரதமருக்கு..

வெசாக் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிரு
க்கும் எமது பௌத்த நண்பர்கள், ஊடகவிலாளர்கள்; மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வெசாக் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்த பிராணின் போதனைகள் ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ மட்டுமன்றி ழுமு மனித வர்க்கத்துக்கும் பொதுவானவை. அந்த பொதுவான போதனைகளை கடைப்பிடித்து இந்த நாட்டு மக்கள் அனைவரும் சாந்தி, சமாதானம், சௌஜன்யம் என்பனவற்றோடு வாழ வழி பிறக்க வேண்டும் என பிரார்த்தனை புரிவோமாக.
பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று கம்பளை நகரில் பௌத்த மதகுருமார் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு கம்பளை சாஹிராக் கல்லூரி மீதும் அதன் அதிபர் மீதும் அபாண்டமான பழிசுமத்தி இனவாத அடிப்படையில் மக்களைத் திரட்டிக் கொண்டுசாஹிராக் கல்லூரி அதிபருக்கு எதிராக வீதியில் ஊர்வலம் சென்ற போது பிரதம மந்திரியும் அவரது மகன் தலைமையிலான ஆதரவாளர்களும் இந்த இனவாத கும்பலை நேரடியாக எதிர்த்து நின்று அவர்களுக்கு எதிராக கோஷமிட்டு அவர்களின் இனவாத முயற்சியை முறியடித்துள்ளனர்.
அது மட்டுமன்றி அவர் தனது உடல் ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் சாதாரண ஒரு பிரஜையைப் போன்று வீதியில் இறங்கி இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். அத்தோடு அவர் முடியுமானவரை ஏனைய பாடசாலைகளுக்கு உடனடியாக விஜயம் செய்து மாணவர்கள் மத்தியில் இந்த இனவாத சக்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து இவர்களின் தீய வலையில் சிக்கி விடாமல் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து வாழ வேண்டிய முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் இது அரசியல் வாதிகளுக்கு சிறந்ததோர் முன்னுதாரணமாகும். சகல இடங்களிலும் மக்கள் செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் கொண்ட அரசியல் வாதிகள் இந்த முன் உதாரணத்தைப் பின்பற்றினால் இனவாதத்தை தூண்ட முயலும் பிற்போக்கு வாத சக்திகளையும் அவர்களின் அனுசரணையாளர்களையும் நாம் விரைவில் மன்கவ்வச் செய்யலாம்.
பௌத்த மதத்துக்கு அதி உயர் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த நாட்டில் பௌத்த மதத் தலைவர்களையே ஏமாற்றும் ஒரு தீய முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நாட்டுக்குள் எந்த வகையிலும் கஷினோக்களுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி பகிரங்கமாக உறுதி அளித்திருந்தார். அவர் இந்த உறுதி மொழியை இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி அதி உயர் பௌத்த பீடங்களின் மகநாயக்கர்களான மல்வத்தை அற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம மதகுருமாருக்கும் வழங்கியிருந்தார்.
சுகாதாரத்துறையின் பரிதாப நிலை பற்றி நாம் அடிக்கடி கூறிவந்துள்ளோம். இன்று வைத்தியர், தாதியர் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகள் என மூன்று பிரிவினரின் கரங்களில் சிக்கி சுகாதார சேவை அதன் மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த மும்முனை போராட்டத்தில் அப்பாவி நோயாளிகளின் உயிர்கள் பகடையாக்கப்பட்டு;ள்ளன. இந்தப் பிரச்சினை காரணமாக குருணாகல் ஆஸ்பத்திரியில் ஒரு சிசு மரணம் அடைந்துள்ளது.
கண்டி ஆஸ்பத்திரியில் பத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் மரணத்தை தழுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் கிடைக்கப் பெறாத தகவல்கள் எவ்வளவோ இருக்கலாம். இங்கும் கூட சம்பந்தப்பட்ட தரப்பினரோடு பேசி பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்காமல் ஜனாதிபதி ஒவ்வொரு பிரிவினரும் அழைக்கும் வைபவங்களுக்குச் சென்று மற்ற பிரிவினரை சாடை மாடையாக நையாண்டி செய்து கொண்டிருக்கின்றார். இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான விளையாட்டாகும். ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது நகைப்புக்குரியதாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் மெயப்பாதுகாவலர்களாக அனுப்பப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதாக அண்மைக் காலங்களில் செய்திகளில் நாம் காணக் கூடியதாக உள்ளது. ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் தங்களை மிக மோசமாக நடத்துவதாக இரண்டு கான்ஸ்டபிள்கள் தமது உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. ஒட்டு மொத்த பொலிஸ் திணைக்களத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகும். பொலிஸ் பிரிவு இந்த விடயத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் இந்த அரசின் பிடியில் இருந்து இந்த நாட்டு மக்கள் விடுதலை பெற இந்த புனித தினங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு பௌத்த மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அஸாத் சாலி
தலைவர் தேசிய ஐக்கிய முன்னணி
மத்திய மாகாண சபை உறுப்பினர்.

(MN)

Post a Comment

0 Comments