ஒரு குடை அளவில் மடக்கி எடுத்து செல்லும் வசதி
கொண்டது இந்த சதா சைக்கிள். சதா சர்வ காலமும் சைக்கிளை
விரும்புபவர்களுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பையில்
வைத்து மடக்கி எடுத்துச் செல்லும் பைக்குகளின் பெரிய பிரச்னையாக இருப்பது
சக்கரங்கள்தான். ஆனால், இந்த பைக்கின் சக்கரங்கள் சற்று வித்தியாசமானவை.
இலகு எடை கொண்டதாக இருக்கின்றன. எனவே, எடுத்துச்செல்வது எளிது.
இந்த சைக்கிளின் இரு சக்கரங்களும் ஹப் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எளிதில் கழற்றி, திரும்பவும் பொருத்திக் கொள்ளும் வசதியுடையதாக இருக்கிறது
இந்த சக்கரங்கள் 26 இஞ்ச் கொண்டது. இதனால், சாதாரண சைக்கிள்களை போன்றே பெரியவர்கள் இயக்க முடியும்.
இந்த சைக்கிளின் இரு சக்கரங்களும் ஹப் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எளிதில் கழற்றி, திரும்பவும் பொருத்திக் கொள்ளும் வசதியுடையதாக இருக்கிறது
ஃபுல் சைஸ்
டிசைனர்
இத்தாலியை
சேர்ந்த கியான்லூகா சதா என்பவர்தான் இந்த சைக்கிளை வடிவமைத்துள்ளார்.
அலுமினியம் அலாய் கட்டமைப்பில் இந்த சைக்கிளை 3 ஆண்டுகள் உழைப்பில்
உருவாக்கினார். தற்போது இதனை முழு அளவிலான உற்பத்தி நிலைக்கு கொண்டு
செல்வதற்காக முதலீட்டாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
பை தயாரிப்பு
இந்த
சைக்கிளுக்கான புதிய பையை தயாரிக்கவும் சதா திட்டமிட்டிருக்கிறார்.
மேலும், முதுகில் மாட்டி எடுத்து செல்லும் வகையிலான பையாக இருந்தால் அது
சிறப்பானதாக இருக்கும் என்கிறார்.
எளிது
இந்த
சைக்கிளை மடக்குவதற்கு ஒரு சிறிய பொத்தானை அழுத்தினால் போதுமானது.
அதேபோன்று, ஒருசில நிமிடங்களில் விரித்து எடுத்து செல்லலாமாம்.
விருதுகள்
புதுமையான கண்டுபிடிப்புக்கான பல்வேறு ஐரோப்பிய விருதுகளை இந்த மடக்கி விரிக்கும் கொண்ட சைக்கிள் பெற்றுள்ளது.
0 Comments