Subscribe Us

header ads

அரசுமீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நாட்டினுள் போதை பொருள் உள்ளிட்ட பாரதூர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் கொண்டுவரப்படுவதைத் தடுக்க அரசாங்கத்தால் இயலாதுள்ளதாக தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நேற்று குறித்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

Post a Comment

0 Comments