பதிலளிக்க முடியும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சை வினாத்தாள்கள்கள் ஆங்கில மொழியிலேயே
வழங்கப்படுகின்றது.
எனினும், அதற்கான பதில்களை தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அளிக்க
முடியும். பரீட்சார்த்தியின் ஆங்கில மொழியறிவை பரீட்சிக்கும் நோக்கில்
ஆங்கில மொழியில் வினாத்தாள் வழங்கப்படுகின்றது.
சட்ட கல்வி ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் தொடர்பிலான
விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் இன்று
நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயாக்க எழுப்பிய வாய்மொழி மூலக் கேள்விக்கு
பதிலளித்த போது ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


0 Comments