Subscribe Us

header ads

கம்பளை பௌத்தமத குருமார்களின் ஆர்பாட்டத்திற்கு மாண்புமிகு பிரதமரின் நடவடிக்கை.

இனாமுல்லாஹ் மசிஹுதீன்
You are great Mr.Prime Minister….Not that you are defending Muslims..but defending the Unity integrity health condition.. you acted like a young hero.
கம்பளை சாஹிராக் கல்லூரியில் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை என பௌத்தமதகுருமார் தலைமையில் நேற்று கல்லூரியை நோக்கி ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆக்ரோஷமாக புறப்பட்டு வந்த பொழுது தனது மகன் அனுராத சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்த பிரதமமந்திரி மாண்புமிகு தி மு ஜயரத்ன அவர்கள் சமாதான சகவாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு களத்தில் இறங்கி வேண்டிக்கொண்ட பொழுதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கேட்கவில்லை.
பொலிசாருக்கு சட்டம் ஒழுங்கை நிலை நருத்துமாறு கட்டளையிட்ட பிரதம அமைச்சர், பொலிஸ்மாதிபர் உற்பட உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளையும் விடுத்தார்.
peace and stability of the Nation….ignoring your

அத்தோடு நின்று விடாமல் தனது உடல் நிலை,மருத்துவ ஆலோசனைகளையும் பொருட்படுத்தாமல் தனது ஆதரவாளர்களுடன் இனங்களுக்கிடையில் சமாதானம் வளர்ப்போம், இனபேதம் எமக்கு வேண்டாம் மதவெறியை ஒழிப்போம் என தானும் கோஷமிட்டவாறு மற்றுமொரு பேரணியை வழி நடாத்திச் சென்றார்.

முஸ்லிம்களுக்காக என்பதனை விட பரந்த மனதுடன் தான் சார்ந்திருக்கும் மதத்திற்காக சமூகத்திற்காக, நாட்டின் அமைதி சமாதானம் ஸ்திரத்தன்மைக்காக சமாதான் சகவாழ்விற்காக தனது எதிர்கால வாரிசுடன் பாதையில் இறங்கி ஒரு துடிப்புள்ள இளைஞர் போல் செயற்பட்ட பிரதம மந்திரி சகல தரப்புக்களாலும் பாராட்டப் பட வேண்டியவரே..!

Post a Comment

0 Comments