தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் தங்களது பெருநாள் பேருரையின் போது மக்களுடன்;
பின் வருமாறு ஒரு சம்பாசனை நடாத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் : மக்களே இன்றய நாள் எத்தகையது ?
மக்கள்; : புனிதமான (தடுக்கப்பட்ட) நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் : இந்த நகரம் எத்தகயது?
மக்கள் : புனிதமான (தடுக்கப்பட்ட) நகரமாகும்.
நபி (ஸல்) அவர்கள் : இந்த மாதம் எத்தகையது?
மக்கள் : புனிதமான (தடுக்கப்பட்ட) மாதமாகும்.
நபி (ஸல்) அவர்கள் : இந்த நாளும் இந்த நகரமும்; மற்றும் இந்த மாதமும்;
எவ்வாறு புனிதமான (தடுக்கப்பட்ட) தாக இருக்கின்றதோ அவ்வாறே உங்களுடைய
இரத்தமும் உங்களுடைய செல்வமும் உங்களுடைய மானமும் உங்களுக்கு மத்தியில்
சங்கைக்குரிய (தடுக்கப்பட்ட) வைகளாகும். (நூல் : புஹாரி)
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே நமது வாழ்வில் மேற்படி நபி வழிச்
செய்தியினைப் பல தடவைகள் கேட்டிருக்கின்றோம். என்றாலும் அது தாங்கி
நிற்கும் ஆழமான கருத்தைப் பற்றி ஒரு முறையாவது நாம் சிந்தித்துப்
பார்த்ததுண்டா? அவ்வாறு நாம் சிந்தித்துப் பார்த்திருந்தால் நமக்கு
மத்தியில் இன்று காணப்படுகின்ற இந்த இழி குணங்கள் எவ்வாறு குடிகொண்டிருக்க
முடியும்.
உண்மையில் நாம் இந்த நபி வழிச் செய்தியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது புறக்கணித்து வாழ்கின்றோம் என்றுதான் கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மேற்படி தங்களது சம்பாசனையில் ஒரு இஸ்லாமியனுடைய
கண்ணியம் செல்வம் மற்றும் இரத்தம் ஆகிய மூன்றும் எவ்வாறு புனித மக்காவும்
துல்-ஹஜ் மாதமும் அவ்வாவே ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் மதிக்கப்படுகின்றதோ
அவ்வாறே மதிக்கப்பட வேண்டும் என்று பணிக்கின்றார்கள்.
ஏனைய இடங்களில் செய்யப்படுகின்ற அமற்களை விட மக்காவில் கஃபாவில்
செய்யப்படுகின்ற அமற்களுக்கு பல மடங்கு நன்மைகள் அதிகமாகக் கிடைப்பது
போன்றே ஏனைய இடங்களில் செய்யப்படுகின்ற பாவச் செயல்களை விட கஃபாவின்
எல்லைக்குள்; செய்யப்படுகின்ற பாவச் செயல்கள் தண்டனையாலும் மிகக்
கடினமானதேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும்
உள்ளுர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித
சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கி இருக்கிறோமோ அந்த
மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக்
கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல்
ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும்
நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம். (அல்-குர்ஆன் :
22: 25)
கஃபாவின் எல்லைக்குள்; செய்யப்படுகின்ற பாவச் செயல்கள் எவ்வாறு ஏனைய
இடங்களில் செய்யப்படுகின்ற பாவச் செயல்களை விடக் கடினமானதாக்
கொள்ளப்படுகின்றதோ அவ்வாறே ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு அவனது இரத்தம்
பொருளாதாரம் மற்றும் கண்ணியம் போன்வற்றில் ஏற்ப்படுத்தப் படுகின்ற
பாதிப்புக்களும்; இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடூரமானதாகவே கருதப்படும்.
இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள் நாம் எந்த அளவு சர்வசாதாரணமாக நமது சகோதரர்களது மானத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றோம்.
நாம் இதனை மிக இலகுவாகக் கருதிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இது
அல்லாஹ்விடம் மிகக்கடுமையான குற்றமாக இருக்குகின்றது என்பதனை நாம் புரிந்து
கொள்ளுதல் வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : இதனை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள்
நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுகு;குத் (திட்டமாக)
அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்;
இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது
அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்குகின்றது. (அல்-குர்ஆன் :
24: 15)
சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் நீண்ட நெடு நாட்களாக நம்
சமூகத்திற்க்கு எத்தனை எத்தனையோ சேவைகளை எல்லாம் செய்தவர்களைக் கூட
சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக ஒரு சில விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்த
அல்லது தலையிடத் தவறி வட்டார்கள் என்ற ஒரோயொரு காரணத்திற்க்காக அவர்கள்
இதற்கு முன் காலா காலமாகச் செய்த அத்தனைகளையும் மறந்து விட்டு கொஞ்சமேனும்
நாகூசாது எப்படி எல்லாம் அவர்களை விமர்சிக்கின்றோம் என்பதைச் சற்று
சிந்தித்துப் பாருங்கள்.
இது அவர்களுடைய கண்ணியத்திற்கும் சுயமரியாதைக்கும் பாதிப்பை
ஏற்படுத்தாதா? இதற்கு அல்லாஹ்விடம் நாம் என்ன பதிலைச் சொல்லப் போகின்றோம்.
நிச்சயமாக அவர்கள் எம்மை மன்னித்தாலே அன்றி அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க
மாட்டான் அல்லவா.
இவ்வாறு நாம் நமது இஸ்லாமிய சகோதரர்களின் மானத்;துடன் விளையாடுவது புனித
கஃபாவை அவமதிப்பதையும் விட பாரதூரமான செயலாகும் என்பதை நாம் உணர்ந்து
கொள்ளுதல் வேண்டும்.
அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள் கஃபாவை நோக்கி கூறினார்கள் : நீ
அல்லாஹ்வின் மாளிகை என்று நான் சாட்ச்சி கூறுகின்றேன் அல்லாஹ் உனது
கண்ணியத்தை உயர்த்தி இருக்கின்றான் என்றாலும் ஒரு முஸ்லிமுடைய கண்ணியம்
உனது கண்ணியத்தை விட உயர்ந்ததே. (நுஸல் : முஃமர் பின் ராசித்)
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவரின்
உள்ளத்தில் நல்லெண்ணங்களை ஏற்படுத்தி நாம் ஒரே சகோதரர்களாக வாழ அருள்
செய்வானாக. (MN)
முனாப் நுபார்தீன்.
0 Comments