-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரைனில் வழங்கப்பட்ட கலீபா
காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றும் போண்து அவர் மேற்கண்வடாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பௌசி, 'உலகத்திலுள்ள முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. அதனால்தான் ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக அறபு நாடுகள் செயற்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் பஹ்ரைனில் வழங்கப்பட்ட கலீபா எனும் பட்டம் மிகப் பெறுமதியானதாகும். அந்த நாடு அவ்வாறான ஒரு பட்டத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கியது என்பது இலங்கை மக்களுக்கு குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் மகிழச்சியளிக்கின்றது.
இந்த மகிழச்சியை கொண்டாடும் முகமாக எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு சுகததாச அரங்கில் வைபவமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாற அழைப்பு விடுக்கின்றேன்' என்றார்.
'இந்த நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தம் ஜனாதிபதியினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டில் மிக அதிகளவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றுதான் இந்த பலக்லைக்கழக கல்லூரியாகும். இந்த கல்லைக்கழக கல்லூரியை இங்கு ஆரம்பிப்பதில் பிரதியைமச்சர் ஹிஸ்புல்லாஹ் எடுத்த காத்திரமான முயற்சிக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றன்' என்றார்.
'ஜனாதிபதி, இந்த நாட்டின் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளப்பரியதாகும். ஜனாதிபதியின் முதன் குறிக்கோள் எது என கேட்டால் முதலாவதாக கல்வி என்பார். இரண்டாவதாகவும் கல்வி என்பார். மூன்றாவதும் கல்வியே என்பார். இவ்வாறு கல்விக்கு பாரிய நிதிகளை வழங்கி கல்வியினை ஊக்கப்படுத்தி வருகின்றார். இந்த கல்லூரியின் நிரந்தர கட்டிடத்திற்கு கூட ஜனாதிபதியினால் நூறு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் அனைத்து சமூகங்களுடனும் ஒற்றுமையுடனம் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றோம். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியுடன் நெருக்கமாக இருந்து இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார். அந்த வகையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த பிராந்திய மக்களுக்கு கிடைத்த பெரிய முத்தாகும்' என அமைச்சர் பௌசி மேலும் கூறினார்.

பட்டமானது,
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என
சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.tamilmirror
0 Comments