Subscribe Us

header ads

பிரிவினையை கைவிடுவோம் : வெசாக் தின வாழ்த்து செய்தியில் இலங்கை ஜனாதிபதி


பிரிவினையை கைவிட்டு தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைவரும் உறுதி பூண வேண்டுமென
இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்த பெருமானின் போதனைகள் சீரான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறந்த மார்க்கங்கள் என தெரிவித்துள்ள அவர், கடந்த வெசாக் பண்டினையின் போது உதயமான சிறீசம்புத்தவ ஜயந்தி வருடத்தில் இலங்கை வாழ் பௌத்தர்கள் அதற்குரிய முக்கியத்துவம் அளித்து செயற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் சக்தி வழிபாட்டுக்குரிய சிறப்பு தினமாக கருதப்படும் இன்றைய சித்திரா பௌர்ணமி தினம் பௌத்தர்களுக்கும் மிகச்சிறந்த பண்டிகை தினமாகும். புத்தபெருமான் அவதரித்தது, ஞானம் பெற்றது, சமாதி நிலையை அடைந்தது மூன்றுமே வெசாக் பௌர்ணமி தினத்தில் நடைபெற்றதாக பௌத்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

இதையொட்டி இக்காலப்பகிதியில் பந்தல்கள் தோரணங்கள், ஒளிக்கூடுகள் என்பன கட்டப்பட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments