Subscribe Us

header ads

புத்தள இளைஞர்களின் துணையோடு கட்டார் கின்னஸ் உலக சாதனையை நிலை நிறுத்தியது.

(தகவல் : இஷாம் மரைக்கார்)
சில மாதங்களுக்கு முன் PUTTALAM SILENT VOLUNTEERS என்கின்ற தன்னார்வ தொண்டர் அமைப்பினரால் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு ஆடைகளை கொடுப்பதற்காக, மக்களிடம் இருந்து பாவித்த (அணியும் அளவிற்கு இருக்கும்) நல்ல ஆடைகளை திரட்டியது. இதிலே சுமார் 200 KG ஆடைகள் சேர்க்கப்பட்டு அவை அனைத்தையும் கழுவி அழகாக மடித்து புத்தளத்தில் இருக்கின்ற ஏழை மக்களின் மத்தியில் SILENT VOLUNTEERS அன்பளிப்பாக கொடுத்தார்கள். இதனை செய்த போது பல பிரச்சினைகளை அவர்கள் முகம் கொடுத்தாலும், இறுதியில் ஏழை மக்களுக்கு அது பெரிய ஒரு உதவியாகவே இருந்தது.
இது நடந்து சுமார் 6 மாதங்களின் பின், இந்த மாதம் கட்டார் நாட்டில் இருக்கும் Qatar Charity எனும் ஒரு அமைப்பு இதே வேலையை பெரிய அளவில் ஏற்பாடு செய்து அதாவது சுமார் 29.5 மெட்ரிக் டன் ஆடைகளை மக்களிடம் இருந்து திரட்டி உலக கின்ன்ஸ் சாதனையை செய்தது. இப்படி சேகரிக்கப்பட்ட ஆடைகளை பிள்ளிபைன்ஸ், யேமன், மத்திய ஆப்ரிக்கா நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இலங்கையை சேர்ந்த 6 இளைஞர்கள் தொண்டர்களாக பங்கு கொண்டதே, அதுவும் அதிலே 3 இளைஞர்கள் இதே வேலையை புத்தளத்தில் திறமையாக செய்து முடித்த SILENT VOLUNTEERS என்கின்ற அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் சுமார் இரவு பகலாக 2 நாட்கள் கண் விழித்து வேலை செய்தார்கள். இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனையை நிர்ணயிக்கும் அமைப்பில் இருந்து வந்தவரின் மேற்பார்வையிலேயே இடம்பெற்றது. இறுதியில் ஏற்கனவே 14 மெட்ரிக் டன் என்ற பழைய சாதனையை 29.5 மெட்ரிக் டன் எனும் அடைவின் மூலம் புதிய சாதனையை நிலைநாட்டியது கத்தார் Charity என்ற அமைப்பு.
Silent Media
கத்தார் பத்திக்கை செய்தி : http://thepeninsulaqatar.com/news/qatar/281961/qatar-charity-sets-guinness-world-record









Post a Comment

0 Comments