கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக இன்று அதிகாலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றிருந்த போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments