Subscribe Us

header ads

சுப்பர் ஸ்டார் ரஜனியின் Android Game - கோச்சடையான்

கோச்சடையான் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள "ஆன்ட்ராய்ட் கிங்டம் ரன்" Game இற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாராகும் முதல் படமான கோச்சடையானுக்கு ஆன்ட்ராய்ட் கேம் செயலியை உருவாக்கியுள்ளது ஹங்காமா நிறுவனம்.


இந்த ஆண்டில் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள முதல் செயலி இது. காடு, துறைமுகம், பெரிய கோட்டைகளில் நடக்கும் சண்டையைப் போல இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.


கோச்சடையான் ரஜினி தனி வீரனாக ஒரு படையையே எதிர்த்து ஜெயிப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதுவும் ரஜினியை முதல் முறையாக இந்த மாதிரி கேமில் பார்ப்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.


வ்ரூவி மூலம் கோச்சடையான் Reign of Arrows என்ற இன்னொரு விளையாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.


Google Play தளத்தில் இந்த விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் நடிகர் ஒருவருக்கு இதுபோல விளையாட்டு உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.(ஸ)

Post a Comment

0 Comments