Subscribe Us

header ads

10 வருடமாக குழந்தை இல்லாத பெண்ணுக்கு ஒன்றுக்கு நான்காக கொடுத்தான் இறைவன்.

10 வருட காலமாக குழந்தையொன்றுக்கு தாயாக சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லையே என கவலையடைந்திருந்த பெண்ணொருவர் ஒரே சமயத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க, மிஷவகா நகரைச் சேர்ந்த லிஸா என்ற மேற்படி பெண் ஏற்கனவே மூன்று தடவைகள் கருச்சிதைவுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அவர் ஜஸ்பர் நகரிலுள்ள மருத்துவமனையில் டன்னர், ரீகன், கொன்னா, வோகன் ஆகிய குழந்தைகளை உரிய பிரசவ காலத்திற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் பிரசவித்துள்ளார். 
 
மேற்படி பிரசவத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு மருத்துவ குழு என்ற ரீதியில் 23பேரைக் கொண்ட மருத்துவர்கள் பங்கேற்றிருந்தனர். 
 
லிஸாவும் அவரது கணவர் ஜோஷ் ஹோல்ட்டும் 14வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்தனர். 
குழந்தையொன்று இல்லாது வாடிய அவர்கள் கடந்த 10
வருட காலமாக குழந்தை விருத்திக்காக சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 


 

Post a Comment

0 Comments