மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான
தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண
சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர்.
இரண்டு மாகாணங்களிலும் ஆறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில்
2441 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1353 வேட்பாளர்களும்
போட்டியிடவுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 102 பிரதிநிதிகளை தெரிவு செய்ய அரசியல் கட்சிகள்
சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2743 வேட்பாளர்களும் தென் மாகாணத்தில் 53
உறுப்பினர்களைத் தெரிவு செய்ய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்
சார்பில் 1051 பேரும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
இரண்டு மாகாண சபைகளிலும் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.
அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேரும்
தென் மாகாணத்தில் 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 பேரும் வாக்களிக்கத் தகுதி
பெற்றுள்ளனர்.
0 Comments