Subscribe Us

header ads

இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் ' விஷ்வ " செயற்திட்டம்

இலங்கையில் புத்தமைவாக்கத்தினை மேலும் ஊக்குவித்தல் என்பதே முதன்மை விஷ்வ கண்டுபிடிப்பாளர் விருதுகள் செயற்திட்டத்தின் இலக்காக திகழ்கின்றது. 
 
இலங்கையிலுள்ள ஆக்கபூர்வமான தொழில்முயற்சியாளர்களின் படைப்புகளுக்கிடையில், தேசிய ரீதியான போட்டி ஒன்றை நடத்தி, அவர்களின் ஆக்கங்களுக்கு விருதுகள் அளிப்பதுடன், அதனை மேம்படுத்துவதற்காகவுமே இந்த போட்டி நடத்தப்படுகின்றதென  'இலங்கையில் வியத்தகு தகவல் தொழிநுட்ப திறனுடையோர் உள்ளனர்" என விஷ்வ செயற்திட்டத்தின் கர்த்தா அர்ஜுண சமரக்கோன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழிநுட்ப ஆதரவு நிகழ்வில் வைத்து தெரிவித்தார்.
 
2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த விஷ்வ செயற்திட்ட போட்டி நிகழ்ச்சியானது இலங்கையிலுள்ள 18 - 40 வயதிற்கிடைப்பட்ட வர்த்தக பயன்பாட்டுக்கான அசல் மென்பொருள் API அல்லது பயன்பாட்டு மென்பொருள் கருத்தாக்கத்தினைக் கொண்டுள்ள சகல தகவல் தொழினுட்ப வல்லுனர்கள், பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கான திறந்த போட்டியாக நடாத்தப்படவுள்ளது.
 
பங்கேற்பாளர்கள், தமது எண்ணங்களை எவ்வாறு நிஜமாக்க விளைகின்றார்கள் என்பது குறித்து ஆய்வறிக்கை மற்றும் வடிவமைப்பு குறிப்புகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டு மென்பொருளாக எவ்வாறு அதனை முன்னெடுக்கலாம் என்பது குறித்த உதாரணங்களையும் குறிப்பிட வேண்டும். 
 
குறித்த இந்த தீர்வானது, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும்ஐரோப்பிய சந்தைக்கு பொருத்தமானதாக இருத்தல் வேண்டும். 
 
விஷ்வ கண்டுபிடிப்பாளர் செயற்திட்டத்தின் வெற்றியாளருக்கு ஒருமில்லியன் இலங்கை ரூபா பரிசாகக் கிடைப்பதுடன், தொழினுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவும் கிடைப்பதோடு சுயாதீன நடுவர் குழாமில் பங்கேற்கும் தொழிற்துறை வல்லுனர்களின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிட்டுகின்றது. 
 
புத்தமைவு சர்வதேச தகவல் தொழினுட்ப மற்றும் சேவை வழங்குனராக திகழ்வதுடன், இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டியில் தொழிநுட்ப விநியோக நிலையங்களைக் கொண்டுள்ள IT கனெக்ட், விஷ்வ செயற்திட்டத்திற்கு நிதியளித்து ஆதரவளிக்கின்றது. 
 
நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சமரக்கோன் அவர்கள் IT கனெக்ட்டின் இந்த முனைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கையிலுள்ள ஏனைய கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் கல்வி வழங்குனர்கள் ஆகியோர், தம்முடன் இணைந்து கொள்வர் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், IT கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பு ஒன்றை இலங்கையில் உருவாக்கி, அதனூடாக தொடரும் செயற்திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் சமரக்கோன் அவர்கள் இந்த விருதுகளுக்காக உலகளாவிய என்று பொருளைத் தரும் விஷ்வ என்ற பெயரை தெரிவுசெய்துள்ளமையானது, தொழிநுட்பத்தின் சாத்தியங்கள் எல்லையற்றது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலேயே எல்லைகளின்றி, தொழிநுட்பமானது, சர்வதேச ரீதியான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
 
இலங்கையிலுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களை நோக்கி தமது கருத்துகளை தெரிவிக்கையில்,
 
உங்கள் வெற்றிகளுக்கு ஓய்வு கொடுக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பது உங்களுக்குத் தெரியும், எனினும் நீங்கள் உங்கள் திறன்களை திறமை மிகுந்த சர்வதேச கண்டுபிடிப்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். 
 
அநேக தகவல் தொழிநுட்ப வல்லுனர்கள் சீனா, ரஷ்யா, ஸ்கேன்டிநேவியா, சிலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தோன்றுவதற்கு காரணம் அவர்கள் தமது வேலையில் மிகுந்த தீவிரமாக இருப்பதன் காரணமாகவே.
 
நீங்கள் அவர்களுடனேயே போட்டியிடப் போகின்றீர்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். 
 
இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், போட்டியில் இணைந்து கொள்வதற்கான தகுதி, உள்நுழைவு விபரங்கள்,விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உள்ளிட்டது. விபரங்கள் தேவையாயின் 0777420569 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments