சவூதி அரேபிய தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இருவர் தொடர்பான வாக்குவாதத்தால் திருமண நிச்சயதார்த்த வைபவமொன்று இடையூறுக்குள்ளான சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.அல் அரேபியா தொலைக்காட்சியின் அறிவிப்பாளர்களான சுஹைர் அல் காஸி மற்றும் கிறிஸ்டியன் பெஸ்ரி ஆகியோரை குறிப்பிட்டே சர்ச்சை ஆரம்பித்தது.
மேற்படி திருமண நிச்சயதார்த்த வைபவ விருந்தின்போது மணமகனின் தந்தை தொலைக்காட்சி அலைவரிசைகளை தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவி (ரிமோட் கொன்ட்ரோல்) மூலம் மாற்றிக்கொண்டிருந்தார்.
இவர் அடிக்கடி அலைவரிசையை மாற்றுவது அங்கிருந்த மணமகளின் தந்தைக்கு விசனத்தை ஏற்படுத்தியது.
'நீங்கள் இருவரில் ஒருவரை தெரிவுசெய்துவிட்டீர்களா.... யார் அது.... சுஹைரா அல்லது கிறிஸ்டியனா?' என மணமகனின் தந்தையிடம் மணமகளின் தந்தை கிண்டலாக கேட்டார்.
இந்த கேள்வி மணமகனின் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும்
அதையடுத்து வைபவம் இடையூறுக்குள்ளானதாகவும் சவூதி அரேபிய
பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
இந்த வைபவம் இரத்தாகும் அச்சுறுத்தலும் ஏற்பட்டது. ஆனால் விருந்தினர்கள் சிலர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதால் நிச்சயதார்த்த பைவபவம் தொடர்ந்து நடைபெற்றது.


0 Comments