Subscribe Us

header ads

நகப் பசையால் விரலின் நுனி பகுதியை இழந்த பெண்

நகங்களை அலங்கரிக்க நகப் பசையை பயன்படுத்திய 17வயது யுவதியொருவர் அந்தப் பசையால் ஏற்பட்ட பாதிப்பால் விரல் அழுக ஆரம்பித்ததையடுத்து விரலின் மேல் நுனிப் பகுதியை இழந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

தென் வேல்ஸின் பொன்ரியூல் எனும் இடத்தை சேர்ந்த சாரா கிறீன்வே என்ற யுவதியே உள்ளூர் கடையில் 3.20ஸ்ரேலிங் பவுணுக்கு வாங்கிய நகப்பசையால் வலது கை சுட்டு விரலின் மேல்பகுதியை இழந்துள்ளார்.
 
அவரது அழுகிய மேற்படி விரல் பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டது.
 
இதனையடுத்து குறிப்பிட்ட நகப்பசையை தயாரித்து விற்ற நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சாரா திட்டமிட்டுள்ளார்.
 
நான் எனது நகங்களை அழகாக்க விரும்பினேன். இறுதியில் நகமொன்றின் ஒரு பகுதியை இழந்து விட்டேன் என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments