பாகிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மிர்பூர் ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற உலக இருபதுக்கு 20 இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 10 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஒவர்களில் 5 விக்கட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் சார்பாக உமர் அக்மல் வேகமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். இவர் தனது மூத்த சகோதரர் கம்ரன் அக்மலுடன் மூன்றாவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
பாகிஸ்தான் சார்பாக உமர் அக்மல் வேகமாக துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். இவர் தனது மூத்த சகோதரர் கம்ரன் அக்மலுடன் மூன்றாவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
உமர் அக்மல் 54 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலா 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். கம்ரன் அக்மல் 31 ஓட்டங்களைப்பெற்றார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணியின் கூட்லர் நைல் 4 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப்பெற்று 16 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
அதிரடியில் மிரட்டிய கிளேன் மெக்ஸ்வெல் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்தார். ஆரம்பவீரரான ஆரொன் பின்ச் 65 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆஸியின் ஏனைய வீரர்கள் எவரும் 8 ஓட்டங்களைத் தாண்டவில்லை. பந்துவீச்சில் சுல்பிகார் பாபர், உமர் குல் மற்றும் ஷஹீட் அப்ரிடி ஆகியோர் தலா இரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக உமர் அக்மல் தெரிவானார்.



0 Comments