Subscribe Us

header ads

வணிகத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்மணிகள்

பேச்­ச­ளவில் கூட பெண்­க­ளுக்­கான உரிமை இல்­லாத காலத்­தி­லி­ருந்து அபூர்­வ­மாக அவ்­வப்­போது சில பெண்கள் தடை­களை தகர்­தெ­றிந்து வர­லாற்றில் இடம்­பி­டித்­து­கொண்­டார்கள். புரட்­சி­க­ர­மான இவர்­க­ளது வாழ்க்கை அவர்­க­ளது சம­கா­லத்து பெண்­க­ளுக்கு மட்­டு­மன்றி அடுத்­த­டுத்து வரு­கின்ற பெண்கள் சந்­த­தி­க­ளுக்கும் தூண்­டு­த­லாக அமையும். அதுவே பின்னர் படிப்­ப­டி­யாக எழு­தப்­ப­டாத பெண்கள் அடிமை சாச­னத்­தையும் கைவி­லங்­கி­னையும் தகர்த்­தெ­றியக் கார­ண­மா­னது.

கண­வ­னுடன் உடன் கட்டை ஏற­வைக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு இன்று விரும்­பி­ய­வர்­க­ளுடன் வாழவும் விரும்­ப­மில்­லா­த­வர்­களை தள்­ளி­வைக்­கவும் உரிமை உண்டு. அது­மட்­டு­மன்றி எந்தத் துறையில் வேண்­டு­மானால் சாதிக்கும் சுதந்­தி­ரமும் ஆண்­களைப் போன்றே பெண்­க­ளுக்கும் உண்டு.

அந்த சுதந்­திரம் பெண்­களின் தரத்­தினை மட்­டு­மன்றி மனி­தர்­களின் தரத்­தையும் உயர்வடைய வழி செய்­கின்­றது.

ஜேன் அடம்ஸ், ஸுஸன் பீ. அந்­தொனி, குயீன் இஸ­பெல்லா, குயீன் எலி­ஸபெத் 1, கிளி­யோ­பட்ரா, மேரி கியூரி அம்­மையார், மர்தா வொஷிங்டன், வோல்ஸ்டன் கிராப்ட், பார்­பரா ஸ்மித் என பல நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­களின் எதி­ரொ­லி­க­ளாக பெண் அடி­மைத்­தனம் படிப்­ப­டி­யாக ஒழிக்­கப்­பட்­டது.

ஆனாலும் உலகின் சில பாகங்­களில் இன்றும் பெண்­க­ளுக்­கான சமத்­துவம் என்­பது கன­வா­கவே தொடர்­கின்­றது. இருப்­பினும் ஆண்­க­ளுக்கு இணை­யாக சவால்­களை எதிர்­கொண்டு விண்ணைத் தாண்­டியும் சாத­னைகள் படைத்து மிளி ரும் பெண்கள் தற்­போ­தைய அனைத்து துறை­க­ளிலும் பிர­கா­சிக்­கின்­றனர்.

கடந்த காலத்தில் தடங்கள் பதித்த பெண்கள் போன்று சம­கா­லத்தில் வர்த்­த­கத்­து­றையில் சக்தி வாய்ந்த பெண்­க­ளாக முன்­ன­ணியில் திகழ்­கின்ற சில பெண்­களைப் பற்றி தெரிந்­து­கொள்வோம். குடும்­பத்தை மட்­டு­மல்­லாது பாரிய நிறு­வ­னங்­க­ளையும் நிர்­வ­கிக்க முடியும் என நிரூ­பிக்கும் சில பெண்­களே இவர்கள்.


இந்திரா நூயி

இந்­தி­யாவின் தமிழ்­நாட்டில் சென்­னையில் பிறந்து கல்வி கற்ற 58 வய­தான இந்திரா நூயி இன்று உலகின் முன்­னணி உணவு மற்றும் குடி­பான அமெ­ரிக்க நிறு­வ­மான பெப்ஸி (PepsiCO) நிறு­வ­னத் தின் தலை­வி­யா­கவும் நிறை­வேற்று அதி­கா­ரி­யா­கவும் உயர்ந்து நிற்­கின்றார். 

278 ஆயிரம் ஊழி­யர்­க­ளைக்­கொண்ட பெப்ஸி நிறு­வ­னத்­தினை திறம்­பட நிர்­வ­கிக்கும் நூயி கடந்த வருடம் பெப்ஸி நிறு­வனம் 64 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வரு­மா­ன­மாக ஈட்ட முக்­கிய கார­ண­மாக இருந்தார். அத்­துடன் தற்­போது வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரும் யோகர்ட் மற்றும் ஹம்மஸ் போன்று உற்­பத்­தி­களின் பக்­கமும் பெப்ஸி நிறு­வ­னத்தை கொண்டு சென்ற பெரு­மையை இவரைச் சேரும்.

1.6 மில்லியன் டொலர்­களை அடிப்­படை சம்­ப­ள­மாக பெறும் நூயி 2013ஆம் ஆண்டில் 12.6 மில்­லியன் டொலர்­களை (சுமார் 164 கோடி ரூபா) மொத்த சம்­ப­ள­மாக பெற்­றுள்ளார். உலகின் அதிக சம்­பளம் பெறும் பெண் நிறை­வேற்று அதி­கா­ரி­களில் நூயியும் ஒருவ­ராவார்.


வர்த்­த­கத்தில் மட்­டு­மன்றி குடும்பத் தலை­வி­யா­கவும் தனது பங்­கினை செவ்­வனே நிறை­வேற்­று­கிறார் இரண்டு குழந்­தை­களின் தாயான நூயி, ஏரா­ள­மான
விரு­து­க­ளையும் கௌர­வங்­க­ளையும் வென்­றுள்ளார்.


மரிஸா மேயர்


38 வய­தே­யான கணினிப் பொறி­யி­லா­ள­ரான அமெ­ரிக்­காவைச் சேர்ந்த மரிஸா மேயர் உல­கையே தன்­கட்­டுப்­பாட்­டுக்குள்  வைத்­தி­ருக்கும் கூகுள் முத­லா­வது பொறி­யி­ய­லா­ள­ராக 1999ஆம் இணைந்தார்.

அங்கு பொறி­யி­ய­லாளர், வடி­வ­மைப்­பாளர், உற்­பத்தி முகா­மை­யாளர், நிறை­வேற்று நிர்­வாகி என பரி­மா­ணங்­களில் கூகுள் தேடு­பொறி, கூகுள் படங்கள், கூகுள் செய்தி, கூகுள் வரை­படம், கூகுள் புக், ஜீமெய்ல் என கூகுளின் நிறு­வ­னத்தின் அத்­தனை உற்­பத்­தி­க­ளிலும் முக்­கிய பங்கு வகித்­தவர் மரிஸா. 2012ஆம் ஜுலை 16ஆம் திகதி கூகுள் நிறு­வ­னத்தின் பிர­தான போட்­டி­யாக கரு­தப்­படும் யாஹு நிறு­வ­னத்தின் முதல் பெண் நிறை­வேற்று அதி­கா­ரி­யாக இணைந்தார்.

வீழ்ச்­சி­யி­லி­ருந்த நிறு­வ­னத்தில் பல ரும் எதிர்­பார்க்க மாற்­றங்­களை துணிச்­ச­லாக மேற்­கொண்டு மீண்டும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்­கின்றார். முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்­கையை அதி­க­ரித்து வரு­மா­னத்­தி­னையும் அதி­க­ரிக்கச் செய்­துள்ளார். இவரின் கடந்த வரு­ட­மானம் சுமார் 479 கோடி ஆகும். உண்­மையில் கட­வு­ளை­விட குடும்பம் மற்றும் யாஹு­வுக்கே முன்­னு­ரி­மை­ய­ ளிப்­ப­தாகக் கூறும் மரிஸா ஒரு குழந்­தையின் தாயா­கவும் குடும்பத் தலை­வி­யா­கவும் தன்னை பொருத்­திக்­கொண்­டுள்ளார்.


மெக் வைட்மேன்

கணனி வர்த்­தக சந்­தையில் பலத்த சவா­லுக்கு முகம்­கொ­டுத்­துள்ள எச்.பி. நிறு­வ­னத்தில் பிர­தம தலை­வியும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யா­க­வு­முள்ள 57 வய­தான மெக் வைட்டின் நிஜப் பெயர் மார்­கெரட் க்ரஷிங் வைட்மேன் ஆகும்.

1998 முதல் 2008 ஆண்டு வரையில் தனது முயற்­சியில் 30 ஊழி­யர்­க­ளையும் 4 மில்­லியன் டொலர்­க­ளையும் வரு­மா­ன­மாக ஈட்­டிக்­கொண்­டி­ருந்த ஈ-பே நிறு­வ­னத்­தினை 15 ஆயிரம் ஊழி­யர்கள் மற்றும் 8 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வரு­மானம் ஈட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றிய திற­மை­யா­னவர் வைட்மேன்.

ஹாவார்ட் வியா­பார கல்­லூரின் எம்.பி.ஏ பட்­ட­தா­ரி­யான வைட்மேன் அர­சி­ய­லிலும் ஆதிக்கம் செலுத்­து­பவர். அமெ­ரிக்­காவின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாகும் வாய்ப்­பு­மிக்­க­வ­ராக 2008இல் இருந்தார்.

சற்றே சரிந்­தி­ருக்கும் எச்.பி நிறு­வ­னத்­தினை மீட்­டெ­டுக்­க­கூ­டிய
சக்­தி­மிக்­க­வராக நிறு­வனம் அவரை நம்­பு­கின்­றது. வோல்ட் டிஸ்னி, ட்ரீம்ஸ் வேர்கள் ஹஸ்­பிரோ போன்ற பல முன்­னணி நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்த அனுபம் அவ­ருக்கும் கைகொ­டுக்கும் என எதி­ர் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

1980இல் திரு­மணம் செய்­து­கொண்ட வைட்மேன் சுமார் 34 வருட திரு­மண வாழ்க்­கையை பாதிக்­காது தொழில் மற்றும் அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ளார். இவர் இரு மகன்­களின் தாயாவார்.


ஜின்னி ரொமெட்டி

தொழில்­நுட்பத் துறையில் முன்­னணி நிறு­வ­ன­மான ஐ.பி.எம். நிறு­வ­னத்தின் தற்­போ­தைய தலை­வியும் நிறை­வேற்று அதி­கா­ரி­யாக செயற்­ப­டு­கிறார் ஜின்னி.

கணனி விஞ்­ஞானம் மற்றும் இலத்­தி­ர­னியல் பொறி­யியில் ஆகி­யவற்றில் பட்­டப்­ப­டிப்பை பெற்­றுள்ள 56 வய­தான அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஜின்னி ஐ.பி.எம். நிறு­வ­னத்தின் முதல் பெண் தலைமை அதி­கா­ரி­யாக 2012ஆம் ஆண் டில் பொறுப்பேற்றுக்­கொண்டார்.

உலகின் வர்த்­கத்­து­றையில் பெரும் தாக்கம் செலுத்தும் பெண்­களில் இவ­ருக்கு கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே தனி இடம் உண்டு.

இவர்கள் போன்று பேஸ்புக் நிறு­வ­னத்தில் பிர­தம செயற்­பாட்டு அதி­காரி ஷெரில் ஸன்பேர்க், டு பொன்ட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி எலன் குல்மேன், லொக்ஹீட் மார்டின் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி மர்லின் ஹிவ்ஸன் என வர்த்த­கத் தில் மேலும் ஏரா­ள­மான பெண்கள் உல­க­ளவில் பெரும் செல்­வாக்­குடன் பரி­ம­ளிக்­கின்­றனர்.






 அது­போல இலங்­கை­யிலும் ஈ.ஏ.பி எதி­ரி­சிங்க குழு­மத்தின் பங்­கு­தார­ ரான சோமா எதி­ரி­சிங்க, ஒடெல் நிறு­வ­னத்தின் நிறு­வ­னரும் பிர­தம நிறை­வேற்று
அதி­கா­ரி­யு­மான ஒத்தாரா குணவர்தன, என்.டி.பி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரேணுகா பெர்ணான்டோ, ப்ரைம் லேண்ட் குழுமத்தின் இணை நிறுவனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாந்தமினி பெரேரா என இலங்கையிலும் பல பெண்கள் வர்த்தகத் துறையில் தடம் பதித்துள்ளனர்.

இப்பெண்மணிகள் அனைவரும் நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினத்தின் இந்த வருடத்தின் தொனிப் பொருளான 'பெண்களின் சமத்துவம் அனைத்துக்குமான வளர்ச்சி' என்பதனை நிஜமாக்குபவர்களாகவே உள்ளனர்.

இவர்களைப்போன்று பெண்களின் சமத்துவத்துக்கான அடியெடுத்து வைக் கும் அனைத்தும் பெண்களுக்கு  நல்வாழ்த்துக்களை கற்பிட்டியின் குரல் தெரிவித்துக் கொள்கின்றது.-

Post a Comment

0 Comments