Subscribe Us

header ads

தீயிட்டு சுவருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களால் தீயிடப்பட்ட நிலையில்  காயமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஞயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான 30 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார. சம்பவ தினம் இரவு தான் அவசர தேவை  நிமித்தம் வெளியேவந்த போது மூன்று ஆண்கள் தன்னைப்பிடித்து தன்மீது தீயிட்டு  சுவருக்கப்பால் தூக்கி எறிந்ததாக குறித்த  பெண் உயிரிழக்க முன்னர் அவரது சகோதரியிடம் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments