தென்னாபிரிக்க அரச பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 5 இந்திய மொழிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாடத்திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் 14 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்றனர்.
இந்த
மொழிகள் முதற்கட்டமாக இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வாழும்
கவாசுலு – நடால் மாகாணத்தில் மூன்றாவது மொழிப் பாடமாக, விருப்பப் பாடமாக
கற்பிக்கப்படவுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சில பாடசாலைகளில் இந்திய
மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எனினும் இந்த மொழிகள் அரசின்
அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

0 Comments