மூன்று வாரங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் காணாமல் போன மலேசிய விமானம் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது மலேசிய அரசாங்கம்.
தமக்கு இறுதியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி விமானம் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் காணாமல் போயுள்ளமையை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.
150க்கும் மேற்பட்ட சீன பிரஜைகள் உட்பட மொத்தம் 227 பயணிகளும் விமானப் பணியாளர்களுடன் 239 பேர் விமானத்தில் இருந்ததாகவும் காணாமல் போன விமானத்தில் பயணித்த எவரும் உயிர்தப்பியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லையெனவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் மலேசிய அரசாங்கம் இந்த முடிவை எட்டியதன் அடிப்படை தெளிவாக வெளியிடப்பட வேண்டும் என சீன அரசாங்கம் கோரியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments