Subscribe Us

header ads

விடுமுறையின்பின் பெண்ணாக திரும்பிவந்த ஆசிரியர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் போது பெண்ணாக உருமாறி வந்துள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த  56 வயதான நபர் ஸ்கொட் யோசெமிட்டி எனும் ஆசிரியர் உயர் நிலை பாடசாலையொன்றில்  24 ஆண்டுகளாக கடமையாற்றி வருகிறார்.

விஞ்ஞானம், மல்டிமீடியா துறை பாடங்களை கற்பிக்கும் இவர், தனது பாடசாலைக் காலத்தில் சிறந்த கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்ததுடன் இராணுவத்திலும் இணைந்திருந்தார்.  சிறப்பாக விளையாடும் ஆட்ட நாயகனாக காணப்பட்டார்.  தற்காப்பு கலை ஆசிரியராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் திடீரென ஸ்கொட் யோசெமிட்டி பெண்ணாக மாறியமை  பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  வசந்த கால விடுமுறைக்காக கடந்த ஏப்பரல் மாதம் வீட்டுக்குச்சென்ற ஸ்கொட்,  திரும்பிவரும் பெண்ணாக உருமாறி வந்துள்ளார். சிறு பராயத்திலிருந்தே தான் ஒரு பெண் எனக் கருதியதாக அவர் கூறுகிறார். தற்போது அவர்  தன் பெயரை கரே என்று மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments