Subscribe Us

header ads

உலக இருபது20 அரை இறுதிக்குத் தெரிவானது இந்தியா

பங்களாதேஷுடனான போடடியில் 8 விக்கெட்களால் இலவாக வெற்றி பெற்ற இந்திய அணி உலக இருபது20 தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாகத் தெரிவானது.

2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் உலக இருபது20 தொடரின் அரையிறுதிக்கு இந்தியா தெரிவாகும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. அனாமுல் ஹக் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அமித் மிஸ்ரா 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் அரைச்சதமடித்தனர்.

Post a Comment

0 Comments