
பேஸ்புக்கில் ஹரியின் பெயரில் செயற்பட்ட போலி நபர், பிரித்தானிய அரச குடும்பத்தின் பக்கிங்ஹாம் அரண்மனை தரைகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஆஸ்திரிய நபருக்கு வழங்குவதாக உறுதியளித்தாராம்.
இந்த புனரமைப்புப் பணிகளுக்காக பிரிட்டனில் நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டுமெனக் கூறி 27,500 யூரோவை பிரித்தானிய வங்கிகளில் வைப்பிலிடுமாறு போலி 'இளவரசர்' கோரியதாக ஆஸ்திரிய நபர் தெரிவித்துள்ளார்.
முதல் தடவை 2500 யூரோவையும் பின்னர் 22,000 யூரோவையும் மற்றொரு தடவை 3000 யூரோவையும் வங்கியில் தான் வைப்பிலிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பின்னர் 'இளவரசரிடமிருந்து' பதில் எதுவும் கிடைக்காத காரணத்தால் ஆஸ்திரிய நபர் பொலிஸில் கடந்த வார இறுதியில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments