
இங்கிலாந்தில் உலகின் மிக பெரிய விமானம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரம் வரை பறக்க கூடிய இந்த விமானம் ஹைப்ரிட் ஏர்
வேஹிகல்ஸ் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கபட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானமாக கருதப்படும் இந்த விமானம் சுமார் 300 அடி நீளம்
(91 மீட்டர்) ஆகும். தற்போது மிக பெரிய விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ்
380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 60 அடி அதிக நீளம்
கொண்டதாக உள்ளது. 50 டன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் பயணிக்க கூடிய இந்த
விமானம், நீரிலும் இருக்கக்கூடிய வகையில் வடிவமைக்க உள்ளது. இதன் நீளத்தை
வரும் காலத்தில் 390 அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments