-Mihwar Ahamed Mahroof-
அஸ்ஸலாமுஅலைக்கும்
“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு

அன்ஹு - நூல் : அஹ்மத்
இன்று நம்மில் பலர் தாடியை சிரைப்பது மட்டுமில்லாமல் அதில் நடப்பு வழக்கிற்கு பலவாரு கோலங்கள் போட்டும், மற்ற நண்பர்களிடம் இருந்து பாராட்டை பெற்றுக்கொள்ள நினைத்து நமது அழகை நாமே சிதைத்துக்கொள்கிறோம். இந்த கோலங்களினால் நமக்கு எந்த பயனுமே இல்லை என்பது நாம் ஒவ்வொருவரும் அறிந்த உண்மை. இதற்காக நாம் செலவிடும் பணம், நேரம் இதற்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஆகவே, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நபிகளாரின் பேரன்பையும் பெற்றுக்கொள்ள இந்த வீணான காரியத்தை செய்யாமலும் அதை ஊக்குவிக்காமலும் இருப்போமாக.
வஸ்ஸலாம்.
0 Comments