Subscribe Us

header ads

இஸ்லாமிய அறிவும் ? இன்றைய முஸ்லிம்களும்.

-Fariudeen Nifras-

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்….!

(அல்லாஹ்வுக்காக கட்டாயம் ஒவ்வொரு முஸ்ஸிமும் கடைசி வரை வாசிக்கவும்)

இலங்கை நாட்டில் தற்போதய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக்கும் பிரச்சினைகளுக்கும் உண்மையிலயே காரணம் தற்கால இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவும் அவர்களின் செயற்பாடும் என்பதை உறுதியாக கூற முடியும்.

சரி இன்று இஸ்லாமிய அறிவுக்கு எமது சகோதரர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்தால் வெற்க்கி தலை குனிய வேண்டியதாக இருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள்> உலக கல்வியில் உயர்வான முஸ்லிம்கள்> முஸ்லிம்களை வழி நடாத்தும் பள்ளி நிறுவாகிகள் (எல்லோரையும் அல்ல) ஆகியோரின் இஸ்லாமிய அறிவு கேள்வி குறி ஆக இருக்கிறது. பிறகு சாதாரண மக்களை கருத்திற் கொள்ள வேண்டியதில்லை எந்தளவுக்கு என்றால் எம்மில் பலர் அடிப்படை இஸ்லாமிய அறிவும் இல்லாமல் இருக்கிறோம். அதிலும் இஸ்லாமிய சிறிய சட்டங்கள் தெரியாதவர்கள் கூட பள்ளி நிறுவாக முக்கிய பதவிகள் வகிக்கின்றனர்.

இதற்கு காரணம் தற்காலத்தில் விஞ்ஞான> தொழிநுட்பத்தின் வளர்ச்சியும் தொழில் போட்டித்தன்மையும் மக்கள் மத்தியில் உலக கல்வியின் தாக்கத்தை உச்சளவில் ஏற்படுத்தியுள்ளது. எந்த அளவுக்கு என்றால் இலகுவாக குர்ஆன் கற்கக்கூடிய வயதில் குர்ஆன் கற்பதை நிறுத்தி விட்டு ஐந்தாம் தர புலமைப் பரீட்சைக்கு பிள்ளைகளை தயார் படுத்த 7 வயதில் இருந்து மேலதிக இரவு நேர வகுப்புக்களுக்கு பிள்ளைகள் அனுப்பப் படுகிறார்கள். அது மட்டுமா அதிகமான சிறிய மத்திரிசாக்களில் வெருமென குர்ஆன் மட்டும்தான் ஓத கற்றுக்கொடுக்கப் படுகின்றது. இதற்கு எல்லாம் தீர்வு என்ன…..?

இஸ்லாமிய சகோதரர்களே ஏன் உலக கல்வி கற்றல் செயற்பாடு விரிவு படுத்தப்பட்ட மாதிரி எமது சொர்க்கத்து வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடிய இவ் கல்வியை நாம் கற்கும் வழிகளை விரிவு படுத்தக் கூடாது….! "அறிவு இல்லாத அமல்கள் வீனானது"

அதற்கான சில வழிகள்…..

* எமது அரசியல் வாதிகள் பள்ளி நிறுவாகிகளுக்கு தலமைத்துவ பயிற்சி மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு இஸ்லாமிய அறிவுடன் கூடிய கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளல்

* வளர்ந்தோர்(adult education) இஸ்ஸாமிய கற்கை முறைகளையும்> இடங்களையும் உருவாக்கள்

* தபால் மூலமான கற்றல் திட்டங்களை ஏற்படுத்தல்

* இலங்கையில் காணப்படும் மதிரிசாக்களில்(Arabic college) பகுதி நேர இஸ்ஸாமிய கற்கையை ஆரம்பித்தல்

* மார்க்க அறிஞர்கள் தாம் பல பிரிவுகளாக பிரிந்து தமது பிரிவு பற்றி மக்களை தெளிவு படுத்துவதை விட இஸ்லாமிய சகோதரர்கள் தாமாக மார்க்கத்தை கற்று அறிந்து கொள்ள அவர்களின்
இஸ்ஸாமிய கற்கைக்கு உதவி புரிதல்

* சிறிய மத்திரிசாக்களில் குர்ஆன் ஓத கற்பித்தலுடன் மார்க்க அறிவையும் சேர்த்து வளங்குதல்

* கட்டாயமாக பாடசாலை மாணவர்கள் சனி> ஞாயிறு தினங்களில் உலக கல்வி மேலதிக வகுப்புக்களுக்கு செல்லாமல் மார்க்க கல்வி நிலையங்களுக்கு சென்று கற்றல் மேற்கொள்ள வேண்டும்

* இவற்றில் சில தற்போது நடை முறையில் உள்ளது இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டும்.

இது எனது சிந்தனைக்கு உற்பட்டு எழுதப்பட்டது. இது சரியானது எனின் இவை நடை பெற இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்ளுங்கள். இது யாரையும் புன்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல உண்மையில் எமது சகோதரர்களின் கவலைக்குரிய நிலமையின் காரணமாக எழுதப்பட்டது ஆகும் இதில் தவரு இருந்தால் இறைவனுக்காக மன்னிக்கவும்.

Post a Comment

0 Comments