பாதை ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணச் சீட்டை கையடக்கத் தொலைபேசியில் செலுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த மூன்று மாதத்துக்குள் பொலிஸ் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள 'வி.பி.என்.' தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தில் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. பின்னர், இது அனைத்துத் தொலைபேசி நிறுவனங்களுடனும் தொடர்புபடுத்தப்படும்.
இந்த சேவையின் மூலம் தண்டப்பணம் செலுத்துமாறு பணிக்கப்படும் குறித்த நபர் அந்தப் பணத்தை குறித்த நேரத்திலேயே தொலைபேசியூடாக செலுத்தி, அதன் பின்னர் வரும் குறுந்தகவலைபொலிஸாரிடம் காட்டி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை திருப்பிப் பெற்றுச் செல்லலாம்.
இதேவேளை, நேரடியாக நீதி மன்றத்துக்கு எழுதப்படும் குற்றச் செயல்களுக்கு இந்த முறையில் பணம் செலுத்த முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments