Subscribe Us

header ads

புத்தளம் சமூக மறுசீரமைப்பாளர்கள் அங்கூரார்ப்பன வைபவம்.

பழமைவாத பிற்போக்கான சிந்தனைகளில் சிக்குண்டுள்ள புத்தளம் மறுசீரமைக்கப்பட்டு, சமூகத்தின் பின்னடைவு நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு; சகல துறைகளிலும் அபிவிருத்திகள் அடைவதற்குரிய "நிலையான உருமாற்றமே" இன்றைய காலத்தின் நமது தேவையாகும். 

நாம் வேற்றுமையில் ஒற்றுமைத் தொடர்வோமாயின்; எமது பிரதேசத்தின் சுத்தம் மற்றும் சுகாதார மேம்பாடு வர்த்தகம், வியாபாரம், கட்டிட நிர்மாணம், கல்வி, தொழில் போன்றனவற்றின் எழுச்சியும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி, சிவில் சமூக ஒழுங்கு, அரசாங்கத்துடனான சமூக நல்லுறவு, ,கலை இலக்கிய மேம்பாடு, சமூக கலாச்சார பொருளாதார மற்றும் அரசியல் விழிப்புணர்வுக் கொண்ட சமூக உருவாக்கம் ஆகிய இலக்குகளை சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் பொது இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவதன் ஊடாக வெற்றிக் கொள்வதே எமது நோக்கமாகும்.

பல்வேறுபட்ட கல்வி பின்னணிகளைக் கொண்ட துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஓரிடத்தில் அறிவை பகிரக் கூடிய களமாக, வாத விவாதங்கள் மூலம் பாராளுமன்றத்தை போன்ற ஜனநாயக அரங்காக, என்றுமே ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து சமூகத்துக்குக்கான அபிவிருத்திகளை கொண்டுவரும் பாலமாக PSR அமைப்பானது இயக்கம்
பெறவிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

புத்தளம் சமூக மறுசீரமைப்பாளர்கள் அமைப்பினது உருவாக்கத்திற்காக கடந்த ஒரு வருட காலமாக பலதரப்பட்ட தரப்பினருடான சந்திப்புக்களும் அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றதன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு உத்தியோகப்பூர்வ அங்கூரார்ப்பனத்திற்கான தயார்படுத்தல்களை செய்துவருகின்றோம்.

இதுவரை உறுப்புரிமை பெற்றுக்கொள்ளாத; நடுநிலையாக சிந்திக்க கூடிய, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கைக் கொண்ட உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கின்ற சங்கங்கள், சமூக அமைப்புக்கள், மார்க்க இயக்கங்கள், விளையாட்டு கழகங்கள் போன்ற நிறுவனங்களினது பிரதிநிதிகளையும் புத்தளம் சமூக மறுசீரமைப்பாளர்கள் உறுப்புரிமையை பெற்று அங்கூரார்ப்பன நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றோம்.

காலம் : மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை
நேரம் : மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
இடம் : புத்தளம் நகர மண்டபம்

Post a Comment

0 Comments