Subscribe Us

header ads

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் விநோத ஆடைகளுடன் மாணவர்கள்

ஜப்பானிய பல்கலைக்கழகமொன்று பட்டமளிப்பு விழாவுக்கு எந்தவகையான ஆடையையும் அணிந்து வருவதற்கு மாணவ மாணவிகளுக்கு அனுமதியளித்திருந்தது.

கனாஸவா கலைக் கல்லூரி எனும் இப்பல்கலைக்கழக   நிர்வாகம் வழங்கிய இந்த அனுமதியை மாணவிகள் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தனர்.

சுப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற சுப்பர் ஹீரோ பாத்திரங்கள், வயலின், கிட்டார், தொலைபேசி,  உணவுப்பொருட்கள் போன்றவற்றின் சாயலிலும் சில மாணவ மாணவிகள் ஆடையணிந்து வந்து தமது பட்டங்களை பெற்றுக்கொண்டமை வேடிக்கையானதாக இருந்தது.

ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களின்போது விதிமுறைகள் தளர்வுபடுத்தப்படுகின்றமை வழக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

Post a Comment

0 Comments