கல்பிட்டி நுரைச்சோலை இலந்தையடி பிரதேச கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைக்குட்டிகள் கரை ஒதுங்கிய நிலையில் அப்பிரதேச வனஜீவி அலுவலக அதிகாரிகளினால் அவை பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கடலினுள் விடப்பட்டது.
இந்த ஆமைக் குட்டிகள் ஒரு நாள் வயதைக் கொண்டவை என வனஜீவி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 25 வருட காலத்தினுள் இவ்வாறு இந்தளவு கடல் ஆமைக் குட்டிகள் கரை ஒதுங்கிய சந்தர்ப்பம் இதுவாகும் என அப்பிரதேச பொது மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

இன்று காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் பெரும் எண்ணிக்கையிலானஆமைக்குட்டிகள் கரை ஒதுங்கியிருந்ததைக் கண்டு அது தொடர்பில் வனஜீவி அலுவலக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற வனஜீவி அதிகாரிகள் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த ஆமைக்குட்டிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மீண்டும் கடலினுள் விடப்பட்டன.

0 Comments