எதிர்வரும் ஏப்பரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் 7 தொடரின் முதல் பாதியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கான பி.சி.சி.ஐ.யின் தீர்மானத்திற்கு ஐ.சி.சி. ஆதரவளித்துள்ளது.
இந்திய லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளமையினால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் கேள்விக்குறியானது. இதனால் ஐ.பி.எல். போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற பி.சி.சி.ஐ. தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதல் பகுதியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மீதிப்பகுதி இந்தியாவில் அல்லது பங்களாதேஷில் நடத்துவதற்கு எதிபார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை.


0 Comments