செய்மதிப் படங்கள் மற்றும் பதிவுகள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்து எம்.எச். 370 விமானம் 239 பேருடன் தென் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து அனைவரும் இறந்துவிட்டதாக மலேஷியா அறிவித்தது.
அத்துடன் செய்திப் படங்கள் காட்டிய தரவுகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து 2600 கிலோ மீற்றர் தொலைவில் எம்.எச்.370 யின் சிதைந்த பாகங்களை தேடும் பணிகள் அவுஸ்திரேலியாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு வாரமாக தேடுதல் நடத்தப்பட்டநிலையில் இன்று அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியா கூறுகையில் 'தற்போது தேடுதல் நடத்தப்படும் பிரதேசத்தில் விமானம் பறந்து சென்றிருக் வாய்ப்பில்லை. இதனால் அப்பிரதேசத்தில் தேடுதல் பணியை கைவிட்டப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்து 5 விமானங்கள் தற்போது தேடுதல் நடத்தப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் 1000 கிலோ மீற்றர் தொலைவில் பல வர்ணத்தில் மிதக்கும் பொருட்களை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து புதிய தேடுதல் பிரதேசதமாக ஆஸியின் பேர்த் நகரிலிருந்து 1850 கிலோ மீற்றருக்கு மாற்றப்பட்டுள்ளது.
எம்.எச் 370 விமானம் தொடர்பில் மேலும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இதனால் இதுநாள் வரையில் தேடுதலுக்கான செலவு மற்றும் நேர விரயம் குறித்து கேள்வியெழும்பியுள்ளதுடன் உண்மையில் எம்.எச். 370 விமானத்துகு என்ன நடந்தது, அது விபத்துக்குள்ளாகிவிட்டதா? என்ற கேள்விகள் மீளவும் ஆரம்பமாகிவிட்டன.

0 Comments