Subscribe Us

header ads

கர்ப்பிணியென்று ஊரை ஏமாற்றிய பெண்

தான் கர்ப்பிணியென்றும் 5 குழந்தைகளை கருவில் சுமப்பதாகவும் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த பெண்ணொருவரே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

இவர் உண்மையில் கர்ப்பிணி என்றும் 5 குழந்தைகளை கருவில் சுமக்கிறார் என்பதையும் அப்பெண்ணின் நண்பி நம்பியுள்ளார். அதனால் குறித்த பெண்ணின் தோழி அப்பெண்ணுக்காக முகநூலொன்றை உருவாக்கி அதில் பெண்ணின் கர்ப்பம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த பலர் மேற்படி தம்பதியினருக்கு பரிசு மழை பொழிந்துள்ளனர்.

குறித்த பெண் 34 கிழமைகளின் பின்னர் தனது கணவனிடம் 5 கட்டில் வாங்கித்தருமாறும் கோரியுள்ளார்.

ஒருநாள் தம்பதியினர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதன்போது கிடைக்கபெற்ற மருத்துவ அறிக்கை குறித்த பெண் கர்ப்பிணி இல்லை என்பதை அறிவித்துள்ளது.  

இதனை கேட்டு பெண்ணின் கணவர் அதர்ச்சிடையந்துள்ளார்.

இப்பெண் வேண்டுமென்றே கட்டுக்கதையொன்றை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்த மருத்துவர் இவரை உளவியல் மதிப்பீட்டு ஆய்வு ஒன்றில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இப்பெண் உலவியல் ரீதியாக தான் கர்ப்பமாக உள்தாக நினைத்திருந்ததால் நினைப்புக்கேற்ப அவளுடைய உடலும் மற்றும் உலவியலும் மாற்றமடையும்.

இவளுக்கு தோன்றியுள்ள இப்பொய்யான உள்நோக்கு இவருடைய மனதை மாற்றியமைக்கும். இது ஒருவகை உலவியல் சம்பந்தமுடைய நோய் என்று இவருக்கு சிகிச்சையழிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி பரிசில்களையும் நன்கொடைகளையும் கொடுத்த அனைவருக்கும் திருப்பி தருவதாக அப்பெண்ணின் கணவர் வாக்குறுதி அழித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

Post a Comment

0 Comments