சுமார் 30 ஆயிரம் வருடங்கள் பழைமையான பாரிய வைரஸ் மீண்டும் உயிர் பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
இப் பாரிய வைரஸ் ஸைபேரியாவின் உறை பனிகளில் படைகளில் உறைந்திருந்துள்ளன. தற்போது புவி வெப்பமடைதலினால் உருகும் பனிப்hறைகளினாலேயே இவை மீண்டும் உயிர் பெற்றுள்ளதாக விஞ்ஞானகள் கூறுகின்றனர்.
மீண்டும் உயிர்பெற்றுள்ள இந்த வைரஸ் பிதோவைரஸ் ஸைபேரிகம் என அழைக்கப்படுகின்றது. இது பாரிய வைரஸ் வகுப்பைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ்கள் மிக மிக நுண்ணியவையாக இருந்தாலும் அதன் பாதிப்புகள் மிகப் பெரிதாக இருக்கும். ஆனால் பாரிய வைரஸ் என அழைக்கப்படும் இந்த வைரஸால் ஒற்றைக் கலமாக அமீபா கலங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துமாம். மனிதன் அல்லது ஏனைய விலங்குகளுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தாது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பாரிய வைரஸ் எனப்படும் இந்த வைரஸின் 1.5 மைக்ரோ மீற்றர்களாகும்.
நுணுக்குக்காட்டியினூடாகவே அவதானிக்க முடியும். இந்த வைரஸ் 10 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில் இவ்வைரஸே அளவில் பெரிது எனக் கூறப்படுகின்றது.
'இந்தளவு நீண்ட காலத்திற்கு பின்னரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்' என தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஜீன் மைக்கேல் க்ளவெரீ கூறியுள்ளார்.

ஸைபேரிய பானிப் பாறைகள் உருகுவதனால் அங்கிருந்து மேலும் பல ஆபத்தான வைரஸ்களும் வெளிவரலாம். அப்பகுதி வைரஸ்களின் அச்சுறுத்தலுக்குட்பட்டிருக்கிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
0 Comments