Subscribe Us

header ads

நடுவானில் பறந்தபோது விமான சிறகின் மூடி கழன்றது: 185 பயணிகள் (படங்கள் இணைப்பு)

வாஷிங்டன்: அமெரிக்காவின் அர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அட்லாண்டாவுக்கு புறப்பட்டது. அதில், 179 பயணிகளும், 6 விமான ஓட்டிகள் குழுவினரும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் சிறகுகளில் ஒன்றின் மூடி எதிர்பாராத விதமாக கழன்று விழுந்தது.  அதில் இருந்த ஆயிலும் கசிய ஆரம்பித்தது. எனினும், இறக்கைகள் சுற்றுவதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், தொடர்ந்து பறந்தால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது. இதையடுத்து, உடனடியாக அட்லாண்டாவின் ஹார்ட்ஸ்பீல்டில் உள்ள ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு விமான தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, விமானம் தரையிறங்கும் வகையில், விமான நிலையத்தில் அவசர, அவசரமாக அனைத்து விமானங்களும் அப்புறப்படுத் தப்பட்டன. இதன்பின்னர் வானில் பறந்து கொண்டிருந்த விமானம், அங்கு தரையிறங்கியது. இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் எப்படி விசிறியின் மூடிகள் கழன்று விழுந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்’’ என்றனர். மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘‘கழன்று விழுந்த மூடி, விசிறியில் மாட்டியிருந்தால், நடுவானில் விமானம் வெடித்து சிதறியிருக்கும். ஆனால், அப்படி நடக்காததால், அதில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்’’ என்றார்.

 

Post a Comment

0 Comments