தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மாணம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
31 வயதான இந்நபர் 6 அடி உயரமானவர்.
இந்நபர் குறித்த தகவலை 0112 451 636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் 0112 321 838 என்ற தொலை நகல் இலக்கத்திற்கும் அனுப்ப முடியும்.
குறித்த நபர் தொடர்பான சரியான தகவலை வழங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மாணம் வழங்கப்படும் அதேவேளை தகவல் வழங்குபவர் குறித்து இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரொஹண தெரிவித்தார்.
கடந்த வாரம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இந்நபரை கைது செய்யச் சென்றவேளை பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

0 Comments