வவுனியா, வைரவபுளியங்குளம்
பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு முன்னால் நின்று
மாணவர்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்த வேளை அதனைத் தட்டிக்
கேட்ட பிரபல வர்த்தகர் மீது அம் மாணவர்கள் தாக்கியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த
31ம் திகதி 6 மணியளவில் அப் பகுதியில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் கல்வி
கற்கும் தனது மகளை ஏற்ற வந்த முன்னாள் ரெலோ உறுப்பினரும் பிரபல
வர்த்தகருமான வடிவேலு என்பவர், குறித்த மாணவர்கள், வீதியில் மதுபோதையில் நின்றதாகவும், தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரிவித்து அவர் அவர்களிடம் ஏன் இப்படி நடக்கிறீர்கள்?.. உங்கட வயதுக்கு நீங்கள் செய்வது சரியா? என
கேட்டு பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் குழு அவர் மீது
கெல்மட் மூலம் தாக்கியுள்ளனர். இதனால் அவர் காயமடைந்து வவுனியா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
பொலிசாருக்கு
தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்தே அவர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய முச்சக்கர வண்டியும் குறித்த மாணவர்களால்
சேதமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா
நகரில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் இப் பகுதியில் அடிக்கடி சண்டைகளில்
ஈடுபடுவது வழமையாகி விட்டதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


0 Comments