Subscribe Us

header ads

கொலை செய்யப்படலாம் என அஞ்சி மயக்க மருந்தின்றி அழகுக்காக பிளாஸ்ரிக் அறுவைச்சிகிச்சை - கடாபியின் விநோத நடவடிக்கை

மறைந்த லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபி தனது அழகை மெருகூட்டுவதற்காக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகள் செய்து கொள்வதில் ஆர்வம்காட்டி வந்ததாகவும், அவர் மயக்க மருந்து எவற்றின் துணையு­ மின்றி அந்த அழகு சிகிச்சைகளை செ­ய்து கொண்டதாகவும், அவருக்கு பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடாபியின் பிரேசிலைச் சேர்ந்த பிளாஸ்ரிக் சத்திர­ சிகிச்சை நிபுணரான லியசியா றிபெயிரொஸ்ஸே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 
கடாபி தோலின் சுருக்கங்களை நீக்குவதற்கும், கேசத்தை பொருத்துவதற்கும் அழகு சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
 
அவர் தனது அழகு சிகிச்சைகளை நிலக்கீழ் அறையில் அதிகாலை வேளையில் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
அவர் தனக்கு வழங்கப்படும் மயக்க மருந்தின் மூலம் தான் படுகொலை செய்யப்படலாம் என அஞ்சியே மயக்க நிலைக்கு உட்படாமல் வலியை தாங்கிக்கொண்டு அறுவைச் சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதாக மருத்துவர் றிபெயிரோ தெரிவித்தார். 
 

Post a Comment

0 Comments