Subscribe Us

header ads

பிரான்ஸ் பாராளுமன்றில் இன்று யுத்த சூனிய வலயம் திரையிடப்படுகிறது

இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் யுத்த சூனிய வலயம் ஆவணப்படம், பிரான்ஸ் பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது.

தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திரையிடல் நிகழ்ச்சி, பிரான்ஸ் நேரப்படி இன்று மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த சூனிய வலய ஆவணப்படத்தை இயக்கிய, இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனர் கெல்லம் மெக்கரேவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் வகையில் இருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே உச்சக்கட்டப் போர் நடைபெற்றபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள், யுத்த சூனிய வலயம் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அந்தப் பகுதியிலும், இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியதாக ஆவணப்படம் தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments