(PX Online Media)
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர்
கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் நேற்று
(06.02.2014) மாலை கல்லூரி மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் சுமைய்யா ரிஸ்வான்
தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா
கே.ஏ.பாயிஸ் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு
பரிசில்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை
உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் பிரதேச
செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவுக்கான
பிரதிக்கல்வி பணிப்பாளர் இஷட் .ஏ.சன்ஹீர் உட்பட மற்றும் பலரும் கலந்து
கொண்டனர்.
பவாசியா, கமாலியா, ஜமாலியா, சமாலியா ஆகிய
நான்கு இல்ல மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தினை
சமாலியா இல்லமும், இரண்டாம் இடத்தினை, கமாலியா இல்லமும், மூன்றாம் இடத்தினை
பவாசியா இல்லமும்,நான்காம் இடத்தினை ஜமாலியா இல்லமும் பெற்றுக்கொண்டன.


0 Comments