Subscribe Us

header ads

விமானத்தில் குண்டு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர் கைது

தன்னிடம் வெடி குண்டு இருப்பதாக கூறியவாறு சுவீடன் சென்று கொண்டிருந்த விமானத்தின் விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற இலங்கையர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஸ்ரொக்கோமிலுள்ள 'ஆலண்ட' விமான நிலையத்திலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஞாயிறு பகல் டுபாயிலிருந்து ஆலண்ட விமான நிலையம் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த  இந்தப் பயணி தன்னிடம் குண்டு இருப்பதாக சத்தமிட்டபடி விமானிகள் அறையைநோக்கி பாய்ந்துள்ளார்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த சமயமே பயணிகள் பகுதியில் இருந்து விமானிகள் அறைக்குள் பாயமுயற்சித்துள்ளார். இவரை விமானப்பணியாளர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

வயர்களால் கைகள் கட்டப்பட்டு இவர் விமானத்தின் தரையில்கிடத்தப்பட்ட நிலையில் விமானம் மீகுதிப்பயனத்தை மேற்கொண்டு  மு.பகல் 11.00 மணிக்கு ஆலண்ட விமானநிலையத்தை சென்றடைந்தது. இவர் விமான நாசவேலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பொரில் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments