Subscribe Us

header ads

கண்ணாடிகளுக்கு திரையிட்ட பஸ்களில் காதல் ஜோடிகளுக்கு உல்லாச இடம்: சாரதி, நடத்துநர் உட்பட நால்வர் கைது

ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிய   இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துநருடன் இரண்டு காதல் ஜோடிகளையும் தம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புள்ள பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த தனியார் போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றிலேயே பொலிஸார் இவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.  தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான என்.கே.வீரசிங்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்தே பொலிஸார் இத்திடீர் சோதனையை மேற்கொண்டனர்.  

இதன் போது, தனது போக்குவரத்து சேவைக்கான நேரம் வரும்வரையில் பஸ் நிலையத்தில் கதவுகள் மூடப்பட்டு கண்ணாடிகளுக்கு திரைச்சீலை போடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டி ஒன்றினை பொலிஸார் சோதனையிட்ட போதே அதற்குள் பாடசாலைகளில் கல்வி பயிலும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் இரு மாணவிகளும் இரு மாணவர்களும் சுதந்திரமாக காதல் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் பஸ்வண்டிக்கு வெளியில் நின்ற பஸ் சாரதியையும் நடத்துநரையும் பொலிஸார் கைது செய்தனர். இவ்வாறு பஸ் வண்டிக்குள் காதல் சல்லாபத்தில் ஈடுபடுவோரிடமிருந்து இவர்கள் கட்டணம் அறவிடுவதாகவும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.  பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments