மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தம்புள்ள பஸ்
நிறுத்துமிடத்தில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் இருப்பதற்கு இடமளித்ததாக
கூறப்படும் காதல் பஸ் தம்புள்ளைக்கு மீண்டும் வருவதற்கு இடமளிக்கமாட்டேன்
என்றும் அந்த பஸ் திரும்பிவந்தால் அடித்து நொறுக்குவேன் என்று அமைச்சர்
ஜனக்க பண்டா தென்னக்கோன் தெரிவித்தார்.கலேவலயில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த பஸ்ஸின் வீதி அனுமதிப்பத்திரத்தையும் இரத்துசெய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த பஸ்ஸில் தங்களுக்கு விரும்பிய விதத்தில் இருப்பதற்காக மாணவர்களிடமிருந்து ஒரு மணிநேரத்திற்கு 300 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பஸ்ஸிலிருந்து கைது செய்யப்பட்ட மாணவிகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் இருவர், நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 Comments