தமிழகத்தின் நெல்லை
டவுனை சேர்ந்தவர் சங்கரன் மகன் சங்கரநாராயணன்
என்ற ரதீஷ். இவருக்கும்
நெல்லை சந்திப்பு பாலபாக்யா நகர் முத்துராஜா மகள்
அனுபாரதிக்கும் நெல்லை டவுன் பார்வதி
சேஷ மகாலில் நேற்று திருமணம்
நடந்தது.
மணமகன்
சங்கரநாராயணன் மேடையில் மைக் மூலம் தனது
உறவினர்களை அழைத்து மணப்பெண்ணுக்கு அறிமுகம்
செய்து வைத்தார்.
பின்னர்
தாலி கட்டி திருமணம் முடிந்ததும்
புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் ரத்த தானம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர்
ரத்ததானம் வழங்கினர்.
இதற்கான
ஏற்பாடுகளை நெல்லை அரசு மருத்துவமனை
ரத்த வங்கி தலைமை மருத்துவர்
கமலாநேரு குழுவினர் செய்திருந்தனர்.


0 Comments