Subscribe Us

header ads

பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு : இருவர் பலி

நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  இருவர் மரணமாகியதுடன் மேலும் ஒருவர் கடும் தீ காயங்களுடன்  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த விபத்துச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்  கிம்புலாபிட்டிய, பத்தாயம் வத்தை பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இடம்பெற்றது.
 
 இந்த சம்பவத்தில் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்களே மரணமடைந்தும் படுகாயமடைந்தும் உள்ளவர்களாவர்;. 
 
கோடமஹா, பிட்டிகல பிரசேத்தைச் சேர்ந்த ரத்நாயக்க முதமியன்சலாகே ஹியந்த (30வயது), மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த சரத் நந்த சேன பண்டார ஆகியோரே சம்பவத்தில் பலியானவர்களாவர். வசந்த என்ற ஊழியர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 பட்டாசு வெடிமருந்துக்களை கலக்கும் போது ஏற்பட்ட இடைத்தாக்கத்தின் போது திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
கிம்புலாபிட்டிய, பத்தாயம் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ரி.பெரேரா என்பவரின் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சூரியா மற்றம் முஹா என்ற  பெயர்களைக் கொண்ட பட்டாசு வகைகள்  இங்கு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
மரணமடைந்தவர்களின் பிரேதம் நீரகொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments